அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..
பாராழும் ராஜாவை
போல் – கருவரை
ஆண்டவன்
நான்..
அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..
பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..
தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு
கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..
பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..
கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் – எங்களை..
விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..
விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்…
அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..
என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..
தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்…
தன்
மாரழகுக்கு வேக்யானம்
கற்பித்து
சேய்யழ்கை
சீக்கில்விட்டுவிட்டு
தாய் உறவை
தவிடாய் காற்றில்
விட்ட
தன்னலதாயின்
உறவுகளில்
மார்பு காம்புகளுக்காய்
ஏங்கும் – நாங்கள்
எந்தஉறவுகளை
நம்பிகைபிடிப்பது
இவ்வுலகில்
தன்னினப்பாலை
தவிர-எவ்வுயிரும்
ஈந்ததில்லை
பிற உயிரிடம்
மனிதனை தவிர…
ஒட்டுக் கோவணத்தில்
ஒட்டிய காசுக்காய்
ஒன்டிய கூட்டத்தில்
விலை போனாயோ -தாயே
மனம் மாண்ட
மனிதத் தாய்களே
உங்களை விட
நாய்கள் எவ்வள்வோ
மேல்….
அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எரிகிறது
உடல் வெந்து
உருக தொடங்கியது
நெற்றி சுருங்கி
வேகத்தடையாகிறது
மயிர் கால்கள்
மாண்டு போகிறது
விரல் நகங்கள்
வீழ்ந்து கிடக்கிறது
மூட்டு கின்னங்கள்
முடங்கி கொள்கிறது
முதுகுத் தண்டு
எழுந்து நிக்கின்றது…….
சடலம்சுடப்பட்டது -
வெட்டியான்
மேற்பார்வையில்
பெயர் பலகை
அகற்றப்பட்டது
மதில் சுவரில்
தபால்காரரின்
வசதிக்காக….!
உறவுகள்
ஊருக்காக…
தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்…
எப்போதவது
கிடைக்கக்கூடும்….
அதுவரை
பொரு மனமே..
தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்….
எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்…
எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது…
எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது
எதுவோ
அதுவே
காதலாகி
கசிந்து
என்னுள்
கனிகிறது…
படுக்கை
துறந்து
பல்துலக்குகிறேன்
கண்ணாடி
முன்
படுக்கையில்
நான்
கண்ணாடியில்
கையில்
காணவில்லை
பல் துலக்கி
படுக்கையில்
நான்…
எனக்காய்
ஏங்குகிறது..
பூமாலை
பூக்கடையில்
புது வேட்டி
துணிக்கடையில்
மேளதாளங்கள்
மத்தளக்காரனிம்
பழைய நாற்காலி
பரண் மேல்
இருந்தும்
நடை பிணமாய்…




