106.கேள்வியின் நாயகி?
காதல்என் கண்களுக்கு கால் முளைத்து
உந்தன் பின்னால் சென்றதேன்?
இரண்டு துண்டாய் இதயம் உடைந்து
உனக்காக ஒன்று துடிப்பதேன்?
எனை கடந்து செல்லும் போது
உன் நிழல் எனை உரசுவதேன்?
யாருமற்ற சமவெளியினிலும்
யாதுமாகி எனை நீ ஆள்வதேன்?
அத்தை பெண் என்னும் அழகிகள் கூட
உன் அழகினில் அடங்கிப்போனதேன்?
நான் பரிக்கும் ரோஜாவிற்கு மட்டும்
உனையடையா ஜென்மம் ஏன்?
நீ உடுத்தும் உடைகளுக்குமட்டும்
தினம் தேவதையின் பரிசம் கிட்டுவதேன்?
அலை அழித்து சென்றப்பின்னும்
கடற்கரையில் உன் சுவடுகளை கண் தேடுவதேன்?
கேள்வியின் நாயகியாக என்னுள்
வேள்விகளை நீ நடத்துவதேன்?
எனக்கு தெரியும்
இரண்டில் ஒன்று சொல்லிவிடுவாய்!
நான் சொல்வது எப்போது
உன்னிடம்?
வியாழன், வைகாசி 17th 2012 அன்று (2 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: 106.கேள்வியின் நாயகி?
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







