105.சகியே!
காதல்
இதயக்கூட்டில்
உன்னை வைத்தேன்
தினமும் அதிலே
சுவாசம் செய்தேன்
வழிகள் எங்கும்
வழியை பதித்தேன்
பனியில் கூட
சூட்டை உணர்ந்தேன்
எந்தன் ஜீவனே!
வரங்கள் வாங்க
சாபம் சுமந்தேன்
வாழ்க்கை வாழ
உயிரை துரந்தேன்
பயணம் நூறு
கால்கள் கண்டும்
சேரும் இடம்
தெரியவில்லையே
எந்தன் கண்மனி!
நீ
காதல் தீயை
கண்ணில் வைத்து
காமன் அம்பை
நெஞ்சில் தைத்தாய்
ரோஜாக்கூட்டம்
நான் வளர்க்க
முள்ளை நீயும்
சூடிக்கொண்டாய்
உன் கண்துடைக்க
என் கைகள் இருந்தும்
இமைகளுக்குள்ளே
ஏன் தேக்கிக்கொண்டாய்
கண்ணீரை
சகியே!
வியாழன், வைகாசி 17th 2012 அன்று (2 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: 105.சகியே!
One Response to “105.சகியே!”
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)








தை 3rd, 2008 at 3:04 பிப
Hi Sir,
” ????? ????
??????? ???????
?????? ????
????????????? ! ”
“Beautiful Lines” …..