vidangan

விடுமுறை நாளொன்றில்

தேவதைகளின் ஊர்வலம் 3 Comments

வானவில் கம்பளம் விரித்து
கடற்கரை மணல் மீது காத்திருந்தேன்
நாம் அமர நிழல் வெளியில்
நட்டுவைத்த குடையின்
மடக்கிவைத்த உன் நினைவுகளோடு
விடுமுறை நாளொன்றில்
வானவெளியின் அடியில்..

நீயில்லா காரணங்கள்

தேவதைகளின் ஊர்வலம் No Comments

 


கண்கள் விட்ட கண்ணீர்
எதுவாக இருக்கும்
நீ இல்லா காரணங்களில்?
அவைகளாகத்தான் இருக்கமுடியும்
நீயில்லா காரணங்கள்.

நம்பிக்கை என்ற காதலில்

தேவதைகளின் ஊர்வலம் No Comments


நான் தனிமைப்பட்ட‌
எல்லா நேரங்களிலும்
உன் நினைவுகளின்
ஒசைகளே உயிர்தருகின்றன..
பின் எதுக்கடி
விட்டுப்பிரிகின்றாய்
என்னை நொடிப்பொழுதுகளில்..
ஆயிரம் பிறைகாண‌
காத்திருக்கின்றன கண்கள்
நாம் என்ற சந்திப்பின்
நிகழ்வுகளுக்கா..
வரும் வரை காத்திருக்கும்
என் கண்கள்..
உன் நினைவுகளின்
கூடாரத்தில்
நம்பிக்கை என்ற காதலில்…

தேயும் வெண்ணிலா

தேவதைகளின் ஊர்வலம் No Comments

வாழ்கையின் வழியிலே
மங்கையின் ஒளியிலே
காதல் படித்தேன்
அவள் நேஞ்சின் ஏட்டிலே!

என்னிலே ஆசைகள்
எண்ணிலா நிலைகளில்
அவள் மீதிலே கொண்டதேன்?

வானம் கண்ட பிம்பம்
நானும் கொண்டதேன்?
நீயில்லா ஊரிலே
நான் தேயும் வெண்ணிலா!

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.