vidangan

தீப்பற்றி எரியும் நிர்வாணம்

வன்முறை No Comments

நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ
தற்கொலைக்கு முனையும் பெண்கள்
முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை
மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்
சொந்த உறவுகளால் தற்கொலைபோல்
கொல்லப்படும் பெண்கள்
இதில் விதிவிலக்கு

மரணத்திற்குப் பின்னான
தங்கள் நிர்வாணத்தை நினைத்து
அஞ்சும் அவர்களை
ஆடை ஒருபோதும் காப்பதில்லை
ஏனைய உறவுகளைப் போலவே
அவையும் துரோகம் இழைக்கின்றன

பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்
சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை

தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்.
-மால‌தி மைத‌ரி

முத்த‌க் காடு

தேவதைகளின் ஊர்வலம் No Comments

த‌னித்த‌னி
வர்ணமாய்ப் பிரித்து
உத‌ட்டில் கரைத்து
உயிரை வ‌ரைந்த‌
ஓவியம் இது
உட‌ல் காடெங்கும் முத்த‌ம்.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.