vidangan

உன‌க்காக‌

சில்மிஷியே, தேவதைகளின் ஊர்வலம் 4 Comments

உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்

உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்

நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன

என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்

உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்

மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்

மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்.

ச‌ம்ம‌த‌மா அன்பே!!

பெய்யென‌ பெய்யும் ம‌ழை

நேச‌ம்

தேவதைகளின் ஊர்வலம் No Comments

என்னால்
எதுவும் முடியாது!
நீ என்றான‌
நான் என்ப‌தில்!
உன்னை நேசிப்ப‌தைவிட‌!!!

காத‌லை த‌விற‌

காதலிகள்.com, தேவதைகளின் ஊர்வலம் 2 Comments

proposal_1

க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல்
அந்தி வான‌ம்
ஏங்கும் அலை
ஒழிந்த‌ சூரிய‌ன்
நீ
நான்
காத‌ல்!!!

பின் க‌விதைக‌ளாய்
என்ன‌ சொல்வ‌து
நீ நான் நாம் என்ற‌
காத‌லை த‌விற‌!!!

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.