
முன் இரவின் முழு ஒளியில்
பனி பொழியும் நதிக்கரையில்
நின்றிருந்தேன் வெகு நேரம்
வின்னைத் தாண்டி வரும் வழியில்
காவல் வைத்திருந்தேன் என் விழியை
அதில் செய்தியில்லை, என்னுள் செயலுமில்லை
இனி செதில்களுக்கும் உயிர் சொந்தமில்லை
யார் அடித்தும் வலித்ததில்லை உன்
கண் அடியில் காதல் விதைக்கும் முன்னே
நீ உழுது பின் நான் விளைந்த அந்த
மனி மனியான மணிப்பொழுதில் நான்
மலர்ந்து விட்டேன், ஏன் இல்லை நீ
என் அருகினில்!
கடவுளின் வாசம், நான் கண்டு கொண்ட
அந்த சந்திப்பொழுதின் தோள் சாய்ததில்,
உன் சாயல் கண்ட கடவுளிடம், நான்
சாந்தி கொண்டேன் உன் சமயத்திடம்!
நதிக்கரையெல்லாம் நீலம் படிந்து
என் நீண்ட பிரிவை கலந்து வைக்கும்
நீ வருகையிலே அதில் கால் நனைத்து
என் உயிரின் மிச்சத்தையும் கரைத்துவிடு.

