
வசப்படாத எழுத்துக்களுக்கிடையில்
வாசித்த வார்த்தைகள் நமக்கான
இடைவெளியை அனைத்துக்கொண்டது
எனக்கு நான் எழுதி அனுப்புவதும்
உனக்காக நீ எழுதிக் கொண்டதும்
எழுத்துகளை தாண்டி மெய்யும் உயிரும்
இனைந்த தருணங்களில் வாழ்ந்த
வாழ்கையின் நினைவலைகள்
இன்னமுன் தபால் பெட்டியுள்!
நான் எழுதிய மெய்யும்
நீ எழுதிய உயிரும்
ஏதோ ஒரு அஞ்சல் நிலையத்தில்
சந்தித்து, என்னையும் உன்னையும்
நலம் விசாரித்த நிகழ்வை நான்
படித்த உன் கடிதம் சொல்லியது.
அன்பே தெரியுமா உனக்கு!
உன் கடிதம் என் கடிதத்தின்மேல்
சந்தித்த நொடியில்
காதல் வசப்பட்டதாம்,
உனக்கனுப்பிய கடிதத்தின்்
நகல் கேட்டு காத்துக்கிடக்கின்றது
இங்கு!
என் பொக்கிஷக்குவியலுக்கு
செல்ல மறுத்து!
