
பூப்பூக்கா செடிகளை
மட்டும் நட்டு வைத்தேன்
பூவனம் முழுவதும்
நான்
என்னடி செய்தாய்
நீ
இலைகளும் பூத்து
வீசுகின்றது உன் வாசம்..

பூப்பூக்கா செடிகளை
மட்டும் நட்டு வைத்தேன்
பூவனம் முழுவதும்
நான்
என்னடி செய்தாய்
நீ
இலைகளும் பூத்து
வீசுகின்றது உன் வாசம்..

மறந்தும் குடை
எடுத்துச் செல்வதில்லை
நான்
மார்கழி மாத
மாலை மழையில் நீ
நனைந்து மழைக்கு
காய்ச்சல் தந்த
அந்த
எதார்த்த நிகழ்ச்சியிலிருந்து…

உனக்கு தெரியாது
என்பதுபோல் என்
காலை உனது கால்
உரசிக்கொண்டு
நாம் பேசியிருக்க
நீலவான வீதியில்
நான் கட்டிய
உனக்கான வீட்டில்
நான் மட்டும் தனியே
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்
நீல வானில் நீ வருகையில்
வின்மீன்கள் குத்தும் என்று
என் கைகள் சிவக்க
அப்புறப்படுத்தி
நீ முத்தமிட்டு
எனை சிவக்க செய்த
அந்த மழைக்கால
உன் கடைசி பிரிதலின்
நினைவுகளின் ஆருதலுடன்
நிலவாக நீ
வருவாய் என்று.