vidangan

தேவதையின் காடு

தேவதைகளின் ஊர்வலம் 5 Comments

விடியாத இரவெல்லாம்
உன் கண்விழியில்
வைத்தாய்

விடிந்த வானம்
தேடும் நிலவாக
என்னை செய்தாய்

மின்சார பூவின் மின்னல்
மனதோடு உரசும் தென்றல்
ஏன் தந்தாய்? நீ ஏன் வந்தாய்?

கனவோடு கண்கள் தொலைத்து
இரவெல்லாம் உன்னை தேடும்
என் தூக்கம்?

மாறன் காண மல்லிகையே
மனதில் தந்தாய் மலையினையே
ஏன் பெண்ணே?

ஓடாத நதிஒன்று
கடல் சேர்ந்த மாயம் என்ன?
தேடாத பொருளொன்று
கைசேர்ந்த அர்த்தம் என்ன?

என்னை சுற்றும் உலகம் மட்டும்
உன்னை சுற்றும் காரணம் என்ன?
கடவுள் காண கண்கள் இன்று
உன்னை கண்டு கடவுளானதென்ன?

நில்லடி!
சொல்லடி! இல்லை
கொல்லடி….

தொடுவானப்பூக்களில்

காதல் No Comments

அந்த தொடுவானப்பூக்களில்
என்னதான் ஒழிந்திருக்கின்றது

யாதுமற்ற உன் சூன்யதில்
மட்டிக்கொண்ட என் மனசைப்போல

நீ சொன்னாலின்றி
எதுவுமே கேட்பதில்லை
எனக்கு

நான் இன்னும்
சொல்லாத என் காதலைப்போல!

நீரோடை

காதல், தேவதைகளின் ஊர்வலம் No Comments

முத்தம் பூத்த
பூமியில்
கண்ணாடி மழை

உடைந்து
நொறுங்கியது
மழையின் துளிகள்

பூக்களுக்குள்
தஞ்சம் புகுந்தது

உன் நா மின்னல்
சுலற்றி அடித்தலில்

நீரோடை மட்டும்
ஏனடீ என் மனதில்?

 

குடைக்குள் காளான்

காதல், தேவதைகளின் ஊர்வலம், நீ No Comments

உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்

குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே

என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

தேவதை மட்டும்

காதல், தேவதைகளின் ஊர்வலம் 2 Comments

நீ தலைசாய்ந்து
பார்க்கும் போதெல்லாம்

குடைசாய்கிறது
என் மனசு.

எத்தனை முறை
சொல்லியிருக்கின்றேன்

பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?

என் பிரிவினில்
நீ தந்த வலியைவிட

நீ எனை வாழ்த்திச்
சென்ற வரிகளே
என்னை கதரிஅழச்
செய்தது.

மாறன்

காதல், காமம் 1 Comment

நான்
எதை இழந்து
தேடினேன்

நீ எனக்கு கிடைத்தாய்
என்பதின் அர்த்தத்தை

உன் முதல் முத்ததில்
ஒழிந்து வைத்திருந்தான்
மாறன்.

 

தவழும் மனசு

கவிதை., காதல் No Comments

நீ பார்க்கையில் தான்
பார்வை என்பதின்
அர்த்தமும்
பார்க்க வேண்டும்
என்ற தவிப்பும்
புரிய ஆரம்பித்தது

உன்னை கண்டதும்
தன் கைகளை
நீட்டி அழைக்கும்
அந்த பக்கத்து
வீட்டு குழந்தை போல

உன்னை நோக்கித்
தவழ்கின்றது மனசு.

சண்டைக்காரியே!

கவிதை. 1 Comment

*
சற்றுமுன் நிலவரம்
காதல் அலைகளை கடந்து
கரையை கடந்தது

உன் கண்கடலில் இருந்து.
என் மனக்கரைக்கு.

*
நான் தொலைய மறுத்த
அனைத்து தருணங்களையும்
உன் கண்கள் கொண்டு
துளைத்தெடுக்கின்றாய் நீ,

உன்னுள்
தொலைந்துப் போவேனோ
என்று என்னுள் ஒழிந்து
கொள்கிறது என் காதல்.

*
சண்டைக்காரியே!
பேசாதா உன்
இதழ்களும்
பேசுகின்ற கண்களும்

எனை தாக்கும்
ஆயுதங்கள்

காதல் நிலையத்தில்
வழக்குத் தொடுத்தேன்

அதற்கு தண்டனையாக
நீ அளிக்க வேண்டும்
என்க்கு 143 முத்தங்கள்.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.