vidangan

104.மகரந்த சேர்க்கை

அன்பு, காதல் No Comments

நாம் சந்தித்தவேளையில்
ஒருவரின் சுயநலம் மற்றவருக்கு
தெரிந்தது

விழிகளை திறந்து
உனக்குள் என்னையும்
என்னுள் உன்னையும்
ரசித்துக்கொண்டபோது

அது நட்பினையும் கடந்து
காதலற்ற நிலையில்
இதயங்களை
மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுத்தியது
நம்மை.

103.ஈரமுத்தம்

காதல், நீ No Comments

நீ என்னோடு இல்லாத
ஒவ்வொரு மணித்துளியையும்
சேமித்து வைத்திருக்கின்றேன்

அந்த நிமிடங்கள்
யுகங்களானாலும்
காத்திருப்பேன்
நான்

நீ அனுப்புவதாக
சொல்லிச்சென்ற
ஈரமுத்தம் பதித்த
கடிதத்திற்காக…

102.கோலம்

காதல், தேவதை, நீ No Comments

புள்ளிகளை 
நிலத்திலிட்டு
கோலத்தை
என் மனதினில்
வரைகின்றாய்
தினமும்

உன் வீட்டு
வாசலில் நீர் தெளித்து  கோலம்

101.பேரழகி

காதல், நீ No Comments

நான்: நீ என் பேரழகி..
நீ: பொய் சொல்கின்றாய், கவிஞனுக்கு அழகே பொய்தான்..
நன: நீ என் கவிகளுக்கு உயிர்தந்தவள்
நீ: ….?!
நான்: உலகத்தில் அனைவருக்கும் பேரழகி தாய்தான்
நீ: ……!
(கன்னம் சிவக்க என்னை உற்று நோக்கினாய் முதல் முறையாக, நானும் )

100.தேவதையின் கால்கள்

காதல், தேவதை No Comments

நான் தெரிந்தே
காலினை மிதித்து

தொட்டு கும்பிடும்
வேளைகளிலெல்லாம்

கால்களை ஒழித்துக்கொள்கிறாய்
சேலைகளுக்குள்

இன்றுவரை
காணமுடியவில்லையடி

தேவதையே உன்
கால்களை..

99 ♥ தவிப்பு

அன்பு, காதல் 1 Comment

உன் கண்களை
என் கண்கள்
கண்டதில்லை

என் சூவாசம்
உன் சூவாசத்தை
சூவாசித்ததில்லை

நம் கைகள்
நான்கும் பரிசித்ததில்லை

நாம் தனிமையில் கூடி
பொழுதைக்கழிக்கவில்லை

முகங்களை
மறந்து மனசுகள்
மட்டும் மாட்டிக்கொண்டன

ஏதோ ஒரு
தவிப்பினில்

எதையோ அடைகின்றோம்
என்று

இருவருமே
தந்துகொள்கிறோம்
அன்பை.

98♥ நீ நிலா நான்

காதல் No Comments

நீயில்லா
வாழ்க்கை என்பது
எனக்கு

நிலவில்லா
வானம்போல

இருந்தும்

வானில்
உன் ஞாபக நட்சத்திரங்கள்
மின்னிபடி என்னை
வாழவைத்துவிடுகின்றது.

97.திருடா! ( thirudaa )

காதல், காமம் 1 Comment

நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,

அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!

சரி போ…

நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?

நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!

96.போர் (phoor)

காதல் No Comments

எப்படி
மூண்டது நமக்குள்
போர்,

வெற்றி
தோல்வியின்றி
ஆசை எண்ணங்களை
சிந்திக்கொண்டிருக்கின்றோம்

முடித்துவிட
மனமில்லாமல்

எப்பொழுதும்!

95.சுவடு (suvadu)

காதல் No Comments

என் இதயத்தின்
மேல் கால்வைத்து
கடந்து சென்ற
பலரில்

சுவடுகளை மட்டும்
விட்டுச் சென்றவள்
நீ!

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.