vidangan

91.சிற்றெரும்பு தோழர்களே!

நான் No Comments

என்னுள் “நான்” என்பது
பசிக்கொண்ட சிங்கம்தான்

ஒருபோதும் சிற்றெரும்புகளை
உண்டு பசியாற்றிக்கொண்டதில்லை

ஒருநாள் “நான்” என்னுள்
இறந்துபோகக்கூடும்

அப்பொழுது அந்தசிற்றெரும்புகள்
பசியாரிக்கொள்ள மறப்பதில்லை…

என் ஞானமும் அவ்வாறே
சிற்றெரும்பு தோழர்களே…

90. அழகே! அழகு!

காதல் No Comments

எல்லாக் காலங்களிலும்
அழகானவைகள்
அழகானதாகவே
இருக்கும் என்றால்

உன்னால் மட்டும்
எப்படி
நாளைவிட குறைவாக
நேற்றைவிட அதிகமான
அழகாக, இன்று மட்டும்
காண்பிக்கமுடிகிறது

சகியே!

89.நீ நான் உலகம்

காதல், நீ No Comments

உன்னைத் தவிர
எல்லாம் அழகழகாக
தோன்றுதடி

நீ பேரழகியாக
நான் என்னியமுதல்…

88.பூவே

காதல் No Comments

உன்
உதட்டு வரிகளில்
எதை எழுதிவைத்திருக்கின்றாய்

என்று
வண்டுகள்
இப்படிப் பறந்து பறந்து
படித்துக்கொண்டிருக்கின்றன,

நீங்கள்

நீங்கள் No Comments

உலகத்திற்கு வேண்டுமென்றால்
நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்;
ஆனால் யாராவது ஒருவருக்கு
நீங்களே உலகமாக இருக்கலாம்.

உலகத்திற்கு !

கவிதை. No Comments

சொற்ப இரண்டு
நாட்களிலேயே,
நாளை என்பது
நேற்று என்றாகி விடுகிறது
உலகத்திற்கு !

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.