vidangan

75.காஷ்மீர்

வன்முறை 1 Comment

பதியம் போட்ட
வண்ண ரோஜாக்கள்
ஊரெல்லாம்
பூத்துக் குளுங்கியது

தினம்
விதவைகள்
நீரூற்ற!

74. கல்லரை

காதல் No Comments

கல்லரை முன்
கண்ணீர் சிந்தி

கண்துடைக்க
என்னை எழுப்பிவிடாதே

உன்
கருவறையில்
ஜனனிக்க வேண்டும்

நான்!

73.உள்ளங்கை

காதல் 1 Comment

உன்
உள்ளங்கையில்
குடியேற ஆசைப்பட்டு

முற்றத்தில் சொட்டியது
அந்திமழை

72.வலி

காதல் 1 Comment

உதிர்ந்தது பூ

வலியில் துடித்தாய்
நீ!

71.பனிச்சிலை

காதல், நீ No Comments

சொட்டுச்சொட்டாக
உள் இறங்கி
உரைந்துப் பனிச்சிலையானது!

மனசெல்லாம்
நீ!

70.கருவறை

காதல் No Comments

என்
உயிர் நெய்த
கருவறையில்
உனைக்கிடத்தி

காதல் வலியெடுக்க
காத்திருந்தேன்

உன்னை பிரசுவிக்க!

69.தீக்குள் விரலை வைத்தால்

காதல் No Comments

தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடி

நான்
பூக்களை பரித்துவிட்டால்
உன் பாதி உயிர்
கரையுதடி

நீ
என்ன முரண்களின்
மகளா!

68.தோசம்!

காதல் No Comments

என் உதடு யாத்திரீகன்கள்
உன் செவ்விதழை சுவைத்தபோதே
பிடித்துவிட்டது எனக்கு

செவ்வாய் தோசம்!

67.போட்டி

காதல் No Comments

காட்சிப்பிழைகளில் கூட
உந்தன் இன்னொரு
பிம்பத்தை ஏற்க மறுக்கின்றது
என் கண்கள்.

உனக்குப் போட்டியாக
இன்னொருத்தி இருப்பதாக
நினைத்து.

66. தேள்

காதல் No Comments

சினேகிதா!
தேளை தொட்டுப்பர்த்ததற்கா
இப்படி கூச்சலிடுகிறாயே

உன்னிடமுள்ள என்னுயிரை
அவ்வளவு எளிதாக தேளிடம்
தந்துவிடுவாயா என்ன.

65.வெண்நிலா விற்பனைக்கு

காதல் 1 Comment

வெண்நிலாக்கள் என்று
விற்பனை செய்துகொண்டிறுகிறேன்

நீ
ஒட்டி எரிந்த
ஸ்டிக்கர் பொட்டுக்களை.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.