வானவில் கம்பளம் விரித்து
கடற்கரை மணல் மீது காத்திருந்தேன்
நாம் அமர நிழல் வெளியில்
நட்டுவைத்த குடையின்
மடக்கிவைத்த உன் நினைவுகளோடு
விடுமுறை நாளொன்றில்
வானவெளியின் அடியில்..

கண்கள் விட்ட கண்ணீர்
எதுவாக இருக்கும்
நீ இல்லா காரணங்களில்?
அவைகளாகத்தான் இருக்கமுடியும்
நீயில்லா காரணங்கள்.

நான் தனிமைப்பட்ட
எல்லா நேரங்களிலும்
உன் நினைவுகளின்
ஒசைகளே உயிர்தருகின்றன..
பின் எதுக்கடி
விட்டுப்பிரிகின்றாய்
என்னை நொடிப்பொழுதுகளில்..
ஆயிரம் பிறைகாண
காத்திருக்கின்றன கண்கள்
நாம் என்ற சந்திப்பின்
நிகழ்வுகளுக்கா..
வரும் வரை காத்திருக்கும்
என் கண்கள்..
உன் நினைவுகளின்
கூடாரத்தில்
நம்பிக்கை என்ற காதலில்…
![]()
வாழ்கையின் வழியிலே
மங்கையின் ஒளியிலே
காதல் படித்தேன்
அவள் நேஞ்சின் ஏட்டிலே!
என்னிலே ஆசைகள்
எண்ணிலா நிலைகளில்
அவள் மீதிலே கொண்டதேன்?
வானம் கண்ட பிம்பம்
நானும் கொண்டதேன்?
நீயில்லா ஊரிலே
நான் தேயும் வெண்ணிலா!

நான் வாசலில்
காவலிருக்கிறேன்
கோலமிட்ட புள்ளியில்
ஒட்டியிருந்தது
உன் கைரேகை…

வானமெல்லாம் நீர்குடுவை
நீருற்ற யாருமில்லை
வறண்டு கிடந்தது பூமி
நீயில்லாமல்
நானும்
நானில்லாமல்
நீயும் என்ற
புள்ளியில்..

வெண்மதியின் வெள்ளிதுகள்கள்
வாணவீதியெல்லாம்
நீயும் நானும்
இடைவெளியில்லாமல்
கட்டியனைத்ததில்
உடைந்து நொருக்கியதோ
நாணத்தில் வான்மதி.
நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ
தற்கொலைக்கு முனையும் பெண்கள்
முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை
மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்
சொந்த உறவுகளால் தற்கொலைபோல்
கொல்லப்படும் பெண்கள்
இதில் விதிவிலக்கு
மரணத்திற்குப் பின்னான
தங்கள் நிர்வாணத்தை நினைத்து
அஞ்சும் அவர்களை
ஆடை ஒருபோதும் காப்பதில்லை
ஏனைய உறவுகளைப் போலவே
அவையும் துரோகம் இழைக்கின்றன
பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்
சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை
தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்.
-மாலதி மைதரி

தனித்தனி
வர்ணமாய்ப் பிரித்து
உதட்டில் கரைத்து
உயிரை வரைந்த
ஓவியம் இது
உடல் காடெங்கும் முத்தம்.

கவிதை..
அதுதான்அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
அவள் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் நான்.

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே-
நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தார கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆஹ, என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில் –
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் –
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
- மீரா

எதை இழந்து தேடினாலும்
நீயே கிடைக்க பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே களவாடப்படுகிறது
எவை மறக்கப்படுகிறதோ
அவைகளே நீயாகிறாய்
பின் என்னதான் செய்வதாம்
உன்னை காதலிக்க மட்டுமே செய்வதை தவிற!